புதுடெல்லி:-இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் நிர்வாகிகள் தேர்தல் விதிமுறைப்படி நடத்தப்படாததால், கடந்த 2012–ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சர்வதேச குத்துச்சண்டை சங்கம், இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தை சஸ்பெண்டு செய்தது.கடந்த வாரத்தில் சர்வதேச குத்துச்சண்டை சங்க பார்வையாளர்கள் நேரடி மேற்பார்வையில் இந்திய குத்துச்சண்டை சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் நடந்தது.
இதைத்தொடர்ந்து இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்துக்கு, சர்வ தேச குத்துச்சண்டை சங்கம் தற்காலிக அங்கீகாரம் அளித்து இருக்கிறது. அத்துடன் இந்திய ஒலிம்பிக் சங்கத்திடம் அங்கீகாரத்துக்கு விண்ணப்பிக்கும் படியும் அறிவுறுத்தி இருக்கிறது.
நவம்பர் மாதத்தில் நடைபெறும் சர்வதேச குத்துச்சண்டை சம்மேளன பொதுக்கூட்டத்தில் நிரந்தர அங்கீகாரம் உறுதி செய்யப்படும். ஆசிய விளையாட்டில் இந்திய குத்துச்சண்டை வீரர்கள் நமது தேசிய கொடியின் கீழ் விளையாடவும் சர்வதேச குத்துச்சண்டை சங்கம் அனுமதி அளித்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி