செய்திகள்,திரையுலகம் நடிகர் சந்தானத்தை கழட்டிவிட்ட உதயநிதி!…

நடிகர் சந்தானத்தை கழட்டிவிட்ட உதயநிதி!…

நடிகர் சந்தானத்தை கழட்டிவிட்ட உதயநிதி!… post thumbnail image
சென்னை:-உதயநிதி ஸ்டாலின் ஓகே ஓகே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர். அந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நயன்தாராவுடன் நடித்த படம் கதிரவேலனின் காதல். இப்போது மீண்டும் அதே ஜோடி நண்பேன்டா படத்திலும் நடித்து வருகிறது. சந்தானமும் இந்த படத்தில் நடித்து வருகிறார்.

நண்பேன்டா படத்தை அடுத்து என்றென்றும் புன்னகை படத்தை இயக்கிய அகமதுவின் இயக்கத்தில் உதயநிதி நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்திற்கு இதயம் முரளி என்கிற வித்யாசமான தலைப்பை சூட்டியிருக்கிறார்கள். தனது முதல் படத்தில் இருந்தே சந்தானத்துடன் கூட்டணி அமைத்து வந்த உதயநிதி இந்தப் படத்தில் ஒரு மாறுதலுக்காக பரோட்டா சூரியை ஒப்பந்தம் செய்திருக்கிறார். மேலும் இதில் உதயநிதிக்கு ஜோடி ஹன்சிகா. அனிருத்துதான் இசை. விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி