அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் 2016ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஹிலாரி கிளிண்டன் ஆர்வம்!…

2016ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஹிலாரி கிளிண்டன் ஆர்வம்!…

2016ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஹிலாரி கிளிண்டன் ஆர்வம்!… post thumbnail image
இண்டியனோலா:-அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவு மந்திரியுமான ஹிலாரி கிளிண்டன் ஆளும் ஜனநாயக கட்சியில் முக்கியத் தலைவராக உள்ளார். அவர் 2016-ம் ஆண்டு நடைபெற இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஆர்வம் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.

நேற்று, அமெரிக்காவின் அயோவா மாகாணத்தின் டெஸ் மோய்னஸ் நகரில் நடந்த ஜனநாயக கட்சி பிரசார கூட்டத்தில் ஹிலாரி கிளிண்டன் பேசினார். அவரது பேச்சைக் கேட்பதற்கு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு இருந்தனர்.அப்போது அவரிடம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்புவது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு கூச்சத்துடன் பதில் அளித்த அவர், ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் என்றாலே பலரும் உற்சாகமாகி விடுகிறார்கள். எனக்கும் பிரசாரத்தின்போது இதுபோன்ற உற்சாகம் வந்து விடுகிறது என்று குறிப்பிட்டார்.

கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த ஓய்வு பெற்ற அயோவா செனட்டர் டாம் ஹார்கின், ஹிலாரியையும், அவருடைய கணவர் பில்கிளிண்டனையும் குறிப்பிட்டு பேசும்போது இவர்கள் மீண்டும் வரும் தம்பதியினர். ஹிலாரியின் அற்புத வாழ்க்கையில் இன்னும் பல அத்தியாயங்கள் எழுதப்படவேண்டும் என்று ஹிலாரி ஜனாதிபதி ஆகவேண்டும் என்ற தனது விருப்பத்தை மறைமுகமாக தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி