சென்னை:-மாஸ் ஹீரோவாக நினைக்கும் அனைவருக்கும் நடிகர் விஜய் தான் ரோல் மாடல். அவரை போலவே கமர்ஷியல் படங்களாக நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர் நடிகர் விஷால்.
இவர் தற்போது பூஜை படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். விஷால் வெறும் நடிகர் மட்டுமில்லை, கதாநாயகன் ஆவதற்கு முன் நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.
சமீபத்தில் இவர் நான் கூடிய விரைவில் படம் இயக்குவேன், அப்படி இயக்கினால் அதில் நான் நடிக்க மாட்டேன், கண்டிப்பாக இளைய தளபதி விஜய்யை வைத்து தான் இயக்குவேன் என்று கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி