இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் மேலும் பல மடங்கு உயர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக அஜித்தின் ‘பில்லா 2’ பட டீஸரை ஒரே நாளில் 10 லட்சம் பார்வையாளர்கள் பார்த்திருந்தினர். அதைத் தொடர்ந்து விஜய் நடித்த ‘தலைவா’ படத்தின் டீஸரை அதற்கும் குறைவான நேரத்திற்குள் 10 லட்சம் ரசிகர்கள் கண்டுகளித்தனர்.அதன் பிறகு ரஜினியின் ‘கோச்சடையான்’ படத்தையும் ஒரே நாளில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டு மகிழ்ந்தனர்.
தற்போது இந்தப் படங்களையெல்லாம் ஐ பின்னுக்கு தள்ளியுள்ளது குறிப்பிடத்தக்கது. கோலிவுட்டை பொறுத்தவரை ரஜினி நடித்த ‘கோச்சடையான்’ படத்தின் டீஸரை மட்டுமே 50 லட்சத்திற்கும் அதிகமானோர் ‘யு டியூப்’பில் பார்த்திருப்பதே இதுவரை சாதனையாக உள்ளது. தொடர்ந்து இதே வேகத்தில் சென்றால் இந்த சாதனையை ‘ஐ’ படம் விரைவில் முறியடிக்கும் என்று கூறுகிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி