நிகழ்ச்சியில் பேசிய சிரஞ்சீவி, நான் திரையுலகை விட்டுக் கொஞ்ச காலம் பிரிந்திருந்தாலும் எனது மகன் ராம்சரண் என்னுடைய இடத்தை அப்படியே தக்க வைத்துக் கொண்டிருப்பது பெருமையாக உள்ளது. எனது 150வது படம் பற்றிய பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த வருடத்தின் இறுதியில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றார்.ராம்சரண் தேஜா பேசுகையில், ‘நீலி…ரங்குல..’ பாடல் இதுவரை வெளிவந்த என்னுடைய பாடல்களிலேயே மிகவும் சிறப்பான பாடலாக இருக்கும். அப்பாவின் 150வது படத்தை எனது அம்மா பெயரில் தயாரிக்க உள்ளோம் என்றார்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் தமிழ்ப் படங்களின் இசை வெளியீடு அடிக்கடி பிரம்மாண்டமாக இங்கு நடைபெற்றாலும், ஒரு தெலுங்குப் படத்தின் இசை வெளியீடு நீண்ட நாட்களுக்குப் பிறகு தற்போதுதான் பிரம்மாண்டமாக நடந்துள்ளது. இந்தப் பாடல்களின் வெற்றியால் யுவனுக்கு மேலும் வாய்ப்புகள் கிடைக்கும் என்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி