சென்னை:-நடிகை நயன்தாராவுடன் நடிக்க ஆசைப்படுகிறவர்களில் நடிகர் பரத்தும் ஒருவர்.இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: சினிமாவுக்கு வந்து 12 வருடமாகி விட்டது வெற்றி தோல்விகளை மாறி மாறி சந்தித்திருக்கிறேன். இதுவரை பெரிய ஸ்டார் வேல்யூ கிடைக்கவில்லையே என்று வருந்தவில்லை. என் உழைப்பை கொடுத்துக்கொண்டே இருக்கிறேன். எப்போது வேண்டுமானலும் அது கிடைக்கலாம்.
என் மனதில் மூன்று ஆசைகள் உள்ளது. என்னை அறிமுகப்படுத்திய ஷங்கர் சார் டைரக்ஷனில் மீண்டும் ஒருமுறை நடிக்க வேண்டும். எந்த ஹீரோவின் கலரையும் மாற்றிவிடும் கௌதம் மேனன் சார் படத்தில் நடிக்க வேண்டும். என் கனவு தேவதை நயன்தாராவுடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும். இந்த மூன்றும் விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. என்கிறார் பரத்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி