இவர் ஆஸ்திரேலியாவில் திரைப்படம் சார்ந்த படிப்பை முடித்ததுடன் பல குறும்படங்கள், மியூசிக் வீடியோக்களும் இயக்கியுள்ளார். தன் நண்பர்கள் கே. ஜெயராமன், எல்.பிருத்திவிராஜ், எஸ். ராஜேந்திரன் ஆகியோரை இணைத்துக் கொண்டு தயாரிக்கிறார்’ரஜினி’ ஜெயராமன். தயாரிப்பாளரான அனுபவம் பற்றி ‘ரஜினி’ ஜெயராமன் கூறும்போது. இது எங்கள் முதல் முயற்சி. கதை பிடித்திருந்தது. இந்தக் காலத்துக்கும் ஏற்ற மாதிரி இருந்தது. படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டது. படம் தயாரிப்பது பற்றி ரஜினி சாரிடம் கூறினேன். மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அவர் இல்லாமல் எனக்கு எதுவும் இல்லை.
இந்தப் பெயர், முகவரி அவர் கொடுத்ததுதான். நல்லா பண்ணு இந்தக் காலத்துக்கு ஏற்ற மாதிரி படம் இருக்கட்டும். செலவு செய்வதில் கவனமாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறி வாழ்த்தினார். நான் அவருடன் 24 ஆண்டுகள் கூடவே இருந்திருக்கிறேன். அது மறக்க முடியாத காலங்கள்.
அவர் சிங்கப்பூரிலிருந்து உடல் நிலைசரியாகி வந்தபோது இடையில் எனக்கும் உடல் நிலை சரியில்லாமல் இருந்ததைக் கேள்விப்பட்டு அங்கிருந்து வந்ததும் முதலில் கூப்பிட்டது என்னைத்தான். அவர் வந்தவுடன் என்னைக் கூப்பிட்டதும் விசாரித்ததும் எனக்கு அழுகை வந்து விட்டது. எதுவும் பேசத் தோன்றவில்லை. என்னைப் பார்த்ததும் அவரும் கண் கலங்கி விட்டார். அவர் ஆசியும் அன்பும் எனக்கு என்றும் உண்டு என்கிறார் நெகிழ்ச்சியுடன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி