செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் காஷ்மீர் வெள்ளப்பெருக்கு: 1,84,000 பேர் மீட்கப்பட்டதாக அரசு அறிவிப்பு!…

காஷ்மீர் வெள்ளப்பெருக்கு: 1,84,000 பேர் மீட்கப்பட்டதாக அரசு அறிவிப்பு!…

காஷ்மீர் வெள்ளப்பெருக்கு: 1,84,000 பேர் மீட்கப்பட்டதாக அரசு அறிவிப்பு!… post thumbnail image
ஸ்ரீநகர்:-காஷ்மீரில் தொடர்ந்து பெய்த கன மழை காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதுவரை இல்லாத அளவுக்கு அங்கு கடுமையான வெள்ளச் சேதம் ஏற்பட்டுள்ளது. 10 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. ஜீலம், தாவி உள்பட முக்கிய நதிகளில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி ஓடியது.

கடந்த சில தினங்களாக வெள்ளம் வடிந்து வந்த நிலையில் மீண்டும் அங்கு மழை பெய்யத் துவங்கியுள்ளது. இதனால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது, மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து இதுவரை 1,84,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு 13 டன் எடை கொண்ட தண்ணீர் சுத்திகரிப்பு மாத்திரைகள் மற்றும் ஆறு தண்ணீர் சுத்திகரிப்பு இயந்தரங்களும் ஸ்ரீ நகரை வந்தடைந்துள்ளன.
அது மட்டுமல்லாமல் கனரக பம்புகளும், ஜெனரேட்டர்களும் வான்வழியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மருத்துவமனை மற்றும் மீட்கப்பட்டவர்கள் தங்கியுள்ள முகாம்களுக்கு தேவையான மின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 3 முதல் 5 கே.வி.ஏ. திறன் கொண்ட 30 ஜெனரேட்டர்களும் ஸ்ரீ நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கூடுதல் தொலைத் தொடர்பு சாதனங்களும் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தால் அங்கு அனுப்பப்பட்டுள்ளது.

பாதுகாப்பு துறையை சேர்ந்த 80 மருத்துவ குழுக்கள் முழுவீச்சில் சுகாதாரப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அவந்திபூர், படான், அனந்த்நாக் உள்ளிட்ட நான்கு இடங்களில் புதிதாக மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன. இதுவரை இம்மருத்துவமனைகளில் 51476 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர லேப் வசதிகள் மற்றும் முழுமையான மருத்துவ சாதனங்களுடன் கூடிய இரு மருத்துவமனைகள் ஸ்ரீ நகரில் திறக்கப்பட்டுள்ளன.பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கு ஏதுவாக 1392 குடில்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 8200 போர்வைகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த மீட்பு பணிகளில் 30000 படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி