செய்திகள்,திரையுலகம்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் டார்ஜான் பட ஹீரோ டென்னிமில்லர் மரணம்!…

டார்ஜான் பட ஹீரோ டென்னிமில்லர் மரணம்!…

டார்ஜான் பட ஹீரோ டென்னிமில்லர் மரணம்!… post thumbnail image
அமெரிக்கா:-அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஆலிவுட் நடிகர் டென்னி மில்லர் (வயது 80). இவர் டார்ஜான் சினிமா படத்தில் நடித்து புகழ் பெற்றவர். கடந்த ஜனவரி மாதம் ‘லூ ஹெரிக்ஸ்’ என்ற ஒருவித நோயால் பாதிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து லாஸ் வேகாஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இவர் 6 அடி 4 அங்குல உயரத்தில் ஆஜானுபாகு தோற்றம் கொண்டவர்.

கடந்த 1950–ம் ஆண்டுகளில் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் கூடைப்பந்து வீரராக இருந்தார். 1959–ம் ஆண்டில் ‘தி ஏப் மேன்’ என்ற படத்தில் டார்ஜான் வேடமேற்று நடித்தார். இப்படம் கடந்த 1932–ம் ஆண்டில் ஒலிம்பிக் தங்கப்பதக்க வீரர் ஜான்னி வெயிஸ் மில்லர் நடித்த படத்தின் ‘ரீமேக்’ ஆகும். இவை தவிர ‘தி பார்ட்டி’ என்ற காமெடி படத்திலும் அவர் நடித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி