பாட்னா:-பீகாரில் கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி இரவு சரக்கு ரெயில் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனையடுத்து அம்மார்க்கமாக சென்ற ரெயில்கள் வேறு மார்க்கமாக அனுப்பிவிடப்பட்டன. அப்போது கோராக்பூர் – முசாபர்நகர் பயணிகள் ரெயில் வேறுபாதையில் அனுப்பிவிடப்பட்டது.
ரெயில் வேறு மார்க்கமாக சென்றபோது பயணிகள் விரைவாக ரெயிலில் இருந்து இறங்கியுள்ளனர். பின்னர் அந்த ரெயிலை காணவில்லை என்று டிவிஷ்னல் மேனேஜர் அருண் மாலிக் தெரிவித்துள்ளார். பின்னர் ரெயில் மற்றொரு டிவிஷ்னல் ரெயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. என்று அருண் மாலிக் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. ரெயிவேயே ரெயிலை தேடிவந்துள்ளது. ரெயிலை ஓட்டி சென்ற ரெயில் ஓட்டுநருக்கும், குறிப்பிட்ட ரெயில் டிவிஷ்னலுக்கு எந்த ஒரு தொடர்பும் கிடையாது. எனவே இந்த மர்மம் ஏற்பட்டுள்ளது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி