அமெரிக்கா:-அமெரிக்க நடிகர் ரிச்சர்ட் கெய்ல். இவர் உடல் நலக்குறைவினால் கலிபோர்னியாவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கபட்டு இருந்தார். அங்கு நேற்று அவர் மரணமடைந்தார். 74 வயதாகும் கெய்ல் ஜேம்ஸ்பாண்ட் படங்களில் வில்லனாக நடித்து உள்ளார். ரோஜர் மூர் ஜேம்ஸ் பாண்டாக நடித்த தி ஸ்பை ஹூ லவ்டு மு (1977),மூன்ரகர்( 1979)ஆகிய 2 படங்களில் இவர் வில்லனாக நடித்து உள்ளார். ஸ்டீபன் ஸ்பீல்பர்க்கின் ஜாஸ் படத்திலும் நடித்து உள்ளார்.
சில வாரங்களுக்கு முன் ஒரு டிரக் விபத்தில் சிக்கிய அவருக்கு அவரது கால் ஒன்றில் முறிவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சேர்க்கபட்டு இருந்தார. அவர் மருத்துவமனையில் இறந்து விட்டதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
38க்கும் மேற்பட்ட டிவி தொடர்களிலும், 45 க்கும் மேற்பட்ட சினிமா படங்களிலும், விடியோ கேம்களிலும் நடித்து உள்ளார்.7 அடி 2 இன்ஞ் உயரம் உள்ள கெய்ல் நடிப்புடன் சில படங்களுக்கு திரைக்கதையும் எழுதி உள்ளார். 1960-ல் டிவி தொடர்களில் நடித்து வந்த கெய்ல் பின்னர் சினிமாவில் நடித்தார்.
கெய்லுக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி