செய்திகள்,திரையுலகம் டீன் ஏஜ் மியூடன்ட் நிஞ்சா டர்டில்ஸ் (2014) திரை விமர்சனம்…

டீன் ஏஜ் மியூடன்ட் நிஞ்சா டர்டில்ஸ் (2014) திரை விமர்சனம்…

டீன் ஏஜ் மியூடன்ட் நிஞ்சா டர்டில்ஸ் (2014) திரை விமர்சனம்… post thumbnail image
நியூயார்க் நகரில் அட்டகாசம் செய்கிறது பூட் கிளான் என்றழைக்கப்படும் தீவிரவாதக்குழு. இத்தீவிரவாதிகள் குழுவின் நடவடிக்கைகளை துடிப்பான செய்தியாளர் ஏப்ரல் ஓநில் துப்பறிந்து செய்திகளை வெளியிடுகிறார்.தனக்கு சூடான செய்திக்களம் கிடைத்து விட்ட சந்தோசத்தில் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை ஏப்ரல் பின் தொடர ஆரம்பிக்கிறார். அப்படி தொடரும் போது தான் இந்த தீவிரவாதக் குழுக்களை எதிர்த்து ஒரு விசித்திரமான குழுவினர் அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை பார்க்கிறார். ஆக சூடான செய்திதளம் கிடைத்த சந்தோசத்தில் துப்பறிய ஆரம்பித்த ஏப்ரலுக்கு விசித்திரமான குழுவினரை பார்த்த உடன் மேலும் சுவையான செய்தி கிடைத்த சந்தோசத்தில் தனது தேடல்களை தீவிரப்படுத்துகிறார். இதில் அவர் சந்திக்கும் மாற்றங்களை வெள்ளித்திரையில் காண்க.

இப்படத்தின் இயக்குநர் கதையை நேர்த்தியாகவும் விறுவிறுப்புடனும் நகர்த்தி இருக்கிறார். ஆச்சரியமூட்டும் காட்சிகளை அமைத்து பாராட்டுகளை அள்ளிக் கொள்கிறார். படத்தில் விசுவல் எபெக்ட்ஸ் மற்றும் மோஷன் கேப்ச்சர் முறை சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இக்காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை பெரிதும் கவர்கிறது.இப்படத்திற்கு திரைக்கதை எழுதிய ஜோஷ் ஆப்பேல்லாம் மற்றும் ஆன்டர் நெமக் ஆகியோரை வெகுவாக பாரட்டலாம். பிரயன் டெய்லர் இசை மிரட்டலாக இருக்கிறது.

மொத்தத்தில் ‘டீன் ஏஜ் மியூடன்ட் நிஞ்சா டர்டில்ஸ்’ அதிரடி………….

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி