செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் ஐசிஐசிஐ வங்கியில் ஏ.டி.எம்.மில் கார்டு இல்லாமல் பணம் பெறும் வசதி!… செல்போன் மூலம் எடுக்கலாம்…

ஐசிஐசிஐ வங்கியில் ஏ.டி.எம்.மில் கார்டு இல்லாமல் பணம் பெறும் வசதி!… செல்போன் மூலம் எடுக்கலாம்…

ஐசிஐசிஐ வங்கியில் ஏ.டி.எம்.மில் கார்டு இல்லாமல் பணம் பெறும் வசதி!… செல்போன் மூலம் எடுக்கலாம்… post thumbnail image
மும்பை:-ஏ.டி.எம். மையங்களில் இதுவரை ஸ்மார்ட் கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுக்கும் வசதி உள்ளது. ஆனால் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி செல்போன் மூலம் பண பரிமாற்றம் செய்து பணம் எடுக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த முறையில் வங்கி கணக்கு வைத்திருக்கும் ஒருவர், வங்கி கணக்கு இல்லாத ஒருவருக்கு பண பரிமாற்றம் செய்யலாம். அதை அவர் செல்போன் எண் மூலம் கார்டு இல்லாமலேயே எடுத்துக் கொள்ளலாம்.

இதற்காக பணம் அனுப்புபவர் முதலில் பணம் பெறுபவரின் பெயர், முகவரியுடன் செல்போன் எண்ணை வங்கியில் பதிவு செய்ய வேண்டும். அப்போது பணம் அனுப்புபவருக்கு 4 இலக்க ரகசிய கோடு எண் ஒன்றும், பணம் பெறுவருக்கு 6 இலக்க ரகசிய கோடு எண் ஒன்றும், தெரிவிக்கப்படும்.பணம் எடுப்பவர் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் எந்த ஏ.டி.எம் மையத்துக்கு சென்று தனது செல்போன் எண், பெறப்போகும் தொகை, ரகசிய கோடு எண்கள் ஆகியவற்றை எந்திரத்தில் பதிவு செய்தால் பணம் கிடைக்கும். பணபரிமாற்றம் செய்த 2 நாட்களுக்கு ரூ. 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொகையை இந்த முறையை பயன்படுத்தி எடுக்கலாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி