புதுடெல்லி:-பொருளாதார உச்சி மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய வோடோபோன் நிறுவனத்தின் இந்தியாவுக்கான தலைவர் மார்டன் பீட்டர் பேசுகையில்,இந்தியாவில் அரசு ஒப்புதல் பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதால் வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் செய்வது கடினமான காரியம்.’ஏர்வேவ்ஸ்’ வாங்குவதற்காக தனது தாய் நிறுவனத்திடம் இருந்து நிதியை பெற கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அரசு ஒப்புதல் கோரப்பட்டது.
ஆனால் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. ஆமாம், இந்தியாவில் தொழில் செய்வது என்பது மிகவும் கடினமான காரியம் தான். தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் செய்வது கடினமான காரியம் என்பதுதான் எனது பொதுவான பார்வை என்று தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி