இதையடுத்து ‘ஷேரு’ என்ற நாயை மணமகனாக உறவினர்கள் தேர்ந்தெடுத்தனர். வெறும் நாய் என்று பார்க்காமல் மணமகனுக்குரிய அனைத்து மரியாதைகளையும் அந்த நாய்க்கு அளித்தனர்.
அலங்கரிக்கப்பட்ட திறந்த காரில் மாப்பிள்ளை ஊர்வலம் நடப்பது போல் நாயை அலங்கரித்து காரில் அழைத்து வந்தனர். பின்னர் நாய்க்கும் இளம் பெண் மங்கிலா முந்தாவுக்கும் திருமணம் நடந்தது.
தாலியை நாயின் கையில் தொட்டு பெண்ணின் கழுத்தில் கட்டினார்கள். அதன் பிறகும் திருமண சடங்குகள் நடைபெற்றன. விழாவுக்கு வந்தவர்ளுக்கு விருந்தும் பரிமாறப்பட்டது.திருமண சடங்குகள் முடிந்ததும், நாய் விரட்டி அடிக்கப்பட்டது. பெண்ணுக்கு துரதிருஷ்டம் விலகவிட்டதாகவும் இனி அவர் விரும்பியவரை திருமணம் செய்யது கொள்ளலாம் என்றும், குலகுரு தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி