இவற்றில் மூன்று படங்கள் மட்டுமே வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்றது. இருந்தாலும் ஒரு படத்திற்கு ஒரு கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த அனிருத், ‘வேலையில்லா பட்டதாரி’ படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தனது சம்பளத்தை திடீரென இரண்டு கோடி ரூபாய் வரை உயர்த்திவிட்டாராம். தற்போது இசையமைத்து வரும் ‘கத்தி, ஆகோ, காக்கிச் சட்டை, நானும் ரவுடிதான்படங்களுக்கெல்லாம் அதே பழைய சம்பளம்தானாம். இனி, யாராவது இசையமைக்கக் கேட்டால் அவருடைய சம்பளம் இரண்டு கோடி ரூபாயாம். ‘என்றென்றும் புன்னகை’ அகமது இயக்கத்தில் உதயநிதி படத்திற்கும் முதலில் இரண்டு கோடி ரூபாய்தான் கேட்டிருக்கிறார். பின்னர் இறங்கி வந்து இருபத்தைந்து லட்சத்தை மட்டும் குறைத்துக் கொண்டாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி