ஆனால் இந்த எதிர்ப்பையும் தாண்டி கத்தி படம் வேகமாக வளர்ந்து வருகிறது. கிட்டத்தட்ட ‘கத்தி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாம். இன்னும் ஒரு சில பேட்ஜ் ஒர்க்குகளுக்கான காட்சிகளும், அனிருத் இசையில் விஜய் அண்மையில் பாடிய பாடல் ஒன்றின் படப்பிடிப்பு மட்டுமே எஞ்சியுள்ளனவாம்.
இதனிடையே ‘கத்தி’ படத்திற்கான போஸ்ட்புரொடக்ஷன் வேலைகளும் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், ‘கத்தி’ படம் குறித்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் புதிய தகவல் ஒன்றினை பதிவு செய்துள்ளார்.
அதில், கத்தி படத்தின் முதல் பகுதி வேலைகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டன. தற்போது இரண்டாம் பகுதிக்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன எனக் குறிப்பிட்டுள்ளார்.
‘கத்தி’ படத்தின் முதல் பாதி டப்பிங் வேலைகள் முடிவடைந்து, இரண்டாவது பாதி டப்பிங் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி