புதுடெல்லி:-ஆஸ்திரேலிய பிரதமராக உள்ள டோனி அப்பாட் இரண்டு நாள் அரசு முறை பயணமாக இன்று இந்தியா வர உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.வியாழனன்று இந்தியா வரும் அப்பாட் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோர் வெள்ளியன்று சந்தித்து பேசுவார் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இந்த சந்திப்புகளின் போது இரு நாடுகளுக்கு உள்ள வர்த்தக உறவை மேம்படுத்துவது குறித்து முக்கிய ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.குறிப்பாக யுரேனியம் சப்ளை தொடர்பாகவும், இலங்கை தமிழர்கள் அகதிகளாக அங்கு செல்வது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி