செய்திகள்,திரையுலகம் நடிகை ஐஸ்வர்யா ராய் ஜோடியாக இர்பான் கான்!…

நடிகை ஐஸ்வர்யா ராய் ஜோடியாக இர்பான் கான்!…

நடிகை ஐஸ்வர்யா ராய் ஜோடியாக இர்பான் கான்!… post thumbnail image
மும்பை:-குழந்தை பெற்ற பின் திரையுகை விட்டு சில வருடங்களாக விலகியிருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராய் மீண்டும் நடிக்க வருவதைப் பற்றி பல்வேறு வதந்திகள் வெளிவந்தன. அவற்றில் துளி கூட உண்மை இல்லாமல் போனது. அதன் பின் அதிகாரப்பூர்வமாக அவர் நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு வெளியானது. சஞ்சய் குப்தா இயக்கும் ‘ஜஸ்பா’ என்ற படத்தின் மூலம் ஐஸ்வர்யா ராய் மீண்டும் நடிக்க வருகிறார். முழுக்க முழுக்க ஐஸ்வர்யா ராயை மையப்படுத்திய கதையைக் கொண்ட படம் இது.

இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராய் ஜோடியாக பாலிவுட்டில் சிறந்த நடிகர் என பாராட்டுப் பெற்று வரும் இர்பான் கான் நடிக்க உள்ளாராம். ஐஸ்வர்யா ராய் வக்கீலாக நடிக்க, இர்பான் சஸ்பென்ட் செய்யப்பட்ட காவலராக நடிக்கிறாராம். படத்தின் ஆக்ஷன் காட்சிகளைப் படமாக்க ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனரான ஸ்பிரோ ரசதோஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இப்படத்திற்காக ஐஸ்வர்யா ராய் சண்டைப் பயிற்சிகளை தற்போதே ஆரம்பித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற கதாபாத்திரங்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பமாக உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி