டோக்கியோ:-ஐந்து நாள் அரசுமுறை பயணமாக ஜப்பான் சென்ற பிரதமர் நரேந்திர மோடி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் படையில் இணைந்து போரிட்ட நேதாஜியின் நண்பரை நேற்று சந்தித்து பேசினார்.
ஜப்பானில் வாழும் இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு நேற்று அளித்த வரவேற்பு நிகழ்ச்சியின்போது ஸைச்சிரோ மிஸுமி என்ற 93 வயது நபரை சந்தித்த அவர், நேதாஜியைப் பற்றிய பழையை நினைவுகள் பல மிஸுமியிடம் பொதிந்துள்ளதாகவும், அவரோடு ஒரு மாத காலம் பழகி, நேதாஜியின் வாழ்க்கையைப் பற்றி அவர் கூறும் தகவல்களை பதிவு செய்ய உதவ ஒரு வீடியோ குழுவினரை பணியமர்த்தும்படி ஜப்பானில் உள்ள இந்திய உயர்தூதருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி