சென்னை:-தெலுங்கில் வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருந்த நடிகை சமந்தா நடித்து சமீபத்தில் வெளியான ‘ரபாசா’ படம் தோல்வியடைந்து விட்டது. தெலுங்கின் முன்னணி நடிகரான ஜுனியர் என்டிஆர் நாயகனாக நடித்திருந்தும் அந்தப் படம் தோல்வி அடைந்தது தெலுங்குத் திரையுலகை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. இத்தனைக்கும் சமந்தா படத்தில் கிளாமராகவே நடித்திருந்தாராம்.
இதே சமந்தாவின் கிளாமர்தான் அவர் இதற்கு முன் புதுமுகம் சாய் சீனிவாசுடன் நடித்த ‘அல்லுடு சீனு’ படத்தைக் காப்பாற்றியது. ஆனால், ‘ரபாசா’ படத்தைக் காப்பாற்ற முடியவில்லை. அது மட்டுமல்ல ‘ரபாசா’ படத்தை பிரமோஷன் செய்வதற்கும் சமந்தா வரவேயில்லையாம். தமிழைப் போலவே தற்போது தெலுங்கிலும் பட பிரமோஷன்களுக்கு வருவதில்லை என அங்கு புதிய பிரச்சனை ஆரம்பமாகியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி