செய்திகள்,திரையுலகம் ‘ஷமிதாப்’ படத்தில் தனுஷுடன் இணையும் நாடோடிகள் அபிநயா!…

‘ஷமிதாப்’ படத்தில் தனுஷுடன் இணையும் நாடோடிகள் அபிநயா!…

‘ஷமிதாப்’ படத்தில் தனுஷுடன் இணையும் நாடோடிகள் அபிநயா!… post thumbnail image
சென்னை:-‘நாடோடிகள்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை அபிநயா.முதல் படத்திலேயே தன்னுடைய திறமையான நடிப்பால் அனைவருடைய பாராட்டையும் பெற்றார்.இந்நிலையில் அபிநயா பாலிவுட்டிலும் கால்பதிக்க இருக்கிறார். ராஞ்சனா படத்தையடுத்து பாலிவுட்டில் தனுஷ் நாயகனாக நடிக்கும் படம் ‘ஷமிதாப்’.

பால்கி இயக்கும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் தான் கமல் ஹாசனின், இளைய மகள் அக்சரா ஹாசன் நாயகியாக அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் அமிதாப் பச்சன் நடிக்கிறார். இப்போது இவர்களுடன் புதுவரவாக அபிநயாவும் இணைந்துள்ளார்.

அவர் படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பார் என்று தெரிகிறது. நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் அதிகம் ஆர்வம் உடைய அபிநயா ‘ஷமிதாப்’ படத்தில் நடிப்பதன் மூலம் தென்னிந்திய அளவில் மேலும் பிரபலம் அடையலாம் என்று நம்புகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி