மாஸ்கோ:-உள்நாட்டுப்போர் நடந்து வருகிற உக்ரைனில் ரஷியா நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருவதாக அந்த நாட்டின் அதிபர் பெட்ரோ போரோஷெங்கோ குற்றம் சாட்டியுள்ளார்.இந்நிலையில், நான் விரும்பினால் உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ் நகரை 2 வாரங்களில் பிடிப்போம்’ என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கூறியதாக இத்தாலியில் இருந்து வெளிவருகிற ‘லா ரிபப்ளிகா’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.இது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து ரஷிய அதிபர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அதிபர் மாளிகை சார்பில் யுரி உஷாகோவ் கூறுகையில், இப்படி அதிபர் கூறவில்லை. அவர் கூறிய கருத்து திரித்து வெளியிடப்பட்டுள்ளது. அதன் அர்த்தமே மாறுபட்டுள்ளது என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி