சென்னை:-தனுஷ், அமலா பால் மற்றும் பலர் நடிக்க முன்னணி ஒளிப்பதிவாளரான வேல்ராஜ் இயக்கத்தில் வெளிவந்த ‘வேலையில்லா பட்டதாரி‘ திரைப்படம் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. சுமார் 25 கோடி ரூபாய்க்கும் மேல் இந்தப் படம் வசூலை அள்ளியதாகச் சொல்கிறார்கள்.
இதனிடையே தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமைக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாம். தெலுங்கில் உள்ள பல முன்னணி தயாரிப்பாளர்கள் இந்த படத்தின் உரிமையை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுகிறார்களாம். ரசிகர்களாலும் அதிகம் ரசிக்கப்பபட்ட இந்தப் படம் தெலுங்கிலும் நல்ல வரவேற்பைப் பெறும் என்பது அவர்களது நம்பிக்கை. அதனால்தான் இந்த அளவிற்குப் போட்டிப் போடுகிறார்கள். தெலுங்கு ரீமேக் உரிமை சில கோடிகள் வரை போகலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி