செய்திகள்,திரையுலகம் பிரபல இயக்குனர் ராஜமௌலியும் காப்பி அடித்தாரா!…

பிரபல இயக்குனர் ராஜமௌலியும் காப்பி அடித்தாரா!…

பிரபல இயக்குனர் ராஜமௌலியும் காப்பி அடித்தாரா!… post thumbnail image
சென்னை:-தெலுங்கு இயக்குனரான ராஜமௌலி, தற்போது அனுஷ்கா, பிரபாஸ், ராணா டகுபதி மற்றும் பலர் நடிக்கும் ‘பாகுபலி’ என்ற சரித்திரப் படத்தை தமிழ், தெலுங்கில் பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார். சில நாட்களுக்கு முன் ராஜமௌலியும் அவர் இயக்கிய ‘விக்ரமார்க்குடு’ படத்தில் வில்லனின் மகன் ஒரு பில்டிங் மீதிருந்து கீழே விழும் காட்சியை, 2002ம் ஆண்டில் விஜயசாந்தி நடித்து வெளிவந்த ‘சாம்பவி ஐபிஎஸ்’ என்ற படத்திலிருந்து காப்பியடித்திருக்கிறார் என சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இந்த இரண்டு படங்களின் காட்சிகளையும் ஒரு வீடியோவில் பதிவு செய்து இணையதளங்களில் பரவவிட்டு வருகிறார்கள்.

இதைப் பற்றி ராஜமௌலியும் டுவிட்டரில் அவருடைய கருத்தைத் தெரிவித்திருக்கிறார். இதற்கு முன் சில படங்களில் இருந்தும், நாவல்களில் இருந்தும் சில காட்சிகளை காப்பியடித்திருக்கிறேன். ஆனால், ‘விக்ரமார்க்குடு’ படத்தில் இடம் பெற்ற அந்த குறிப்பிட்ட காட்சி என்னுடைய அப்பாவால் நீண்ட நாட்களுக்கு முன் எழுதப்பட்ட ஒன்று. அந்தக் காட்சி எப்படி ‘சாம்பவி ஐபிஎஸ்’ படத்தில் இடம் பெற்றது என்று தெரியவில்லை. இதைப் பற்றியெல்லாம் இப்போது விவாதித்துக் கொண்டிருக்க எனக்கு நேரமில்லை. இந்தப் பதிவு கூட என்னை நம்புபவர்களுக்காகத்தான் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அவர் இயக்கிய ‘நான் ஈ’ படம் கூட ஆஸ்திரேலிய குறும்படமான ‘காக்ரோச்’ படத்தை அடிப்படையாகக் கொண்டது என்ற பேச்சு நிலவியது. அவர் இதற்கு முன் இயக்கிய ‘மகதீரா’ படம் கூட தமிழில் ஸ்ரீதர் இயக்கி 1963ம் ஆண்டு வெளிவந்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற படத்தின் கதையை வைத்து எடுக்கப்பட்ட படம்தான் என்றும் ஒரு பேச்சு இருந்தது. அப்படியென்றால் ‘பாகுபலி’ படம் எந்த திரைப்படம், அல்லது நாவல் என ரசிகர்கள் இப்போது கேள்வி எழுப்புகிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி