சென்னை:-விஜய்– சமந்தா நடிப்பில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘கத்தி’. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
விஜய் தனது முந்தைய படங்களில் ஒரு பாடல் பாடுவதை வழக்கமாக கொண்டு வந்தார். அந்த வரிசையில், இந்த படத்திலும் விஜய் பாடப்போவதாக தகவல் வந்தது. அதன்படி கத்தி படத்துக்காக அனிருத் இசையில் ‘செல்பிபுள்ள…’ என்று தொடங்கும் பாடலை விஜய் பாடியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி