செய்திகள்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் 821 ஆண்டுகளுக்கு பிறகு நாலந்தா பல்கலைக்கழகம் மீண்டும் இன்று தொடக்கம்!…

821 ஆண்டுகளுக்கு பிறகு நாலந்தா பல்கலைக்கழகம் மீண்டும் இன்று தொடக்கம்!…

821 ஆண்டுகளுக்கு பிறகு நாலந்தா பல்கலைக்கழகம் மீண்டும் இன்று தொடக்கம்!… post thumbnail image
பாட்னா:-இந்தியாவில் 6–ம் நூற்றாண்டில் குப்தர்கள் ஆட்சிக் காலத்தில் (தற்போதைய பீகார் மாநில பகுதியில்) புகழ்பெற்ற நாலந்தா பல்கலைக்கழகம் செயல்பட்டு வந்தது.அந்த பல்கலைக்கழகத்தில் உலகம் முழுவதும் இருந்து மாணவர்கள் படித்து சென்றனர். 1193–ம் ஆண்டு குப்தர்கள் மீது படையெடுத்த துர்க் இனத்தவர்கள் அந்த நாட்டை சூறையாடினார்கள். செல்வங்களை கொள்ளையடித்து சென்றனர். அப்போது நாலந்தா பல்கலைக்கழகமும் அழிக்கப்பட்டது.

இதனால் நாலந்தா பல்கலைக்கழகம் முடங்கியது. தற்போது அந்த பல்கலைக்கழகத்தின் கட்டிடங்கள் தொல்பொருள் ஆய்வுத்துறைக் கட்டுப்பாட்டின் கீழ் நினைவு சின்னமாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் கடந்த 2006–ம் ஆண்டு பீகார் சட்டசபைக் கூட்டத்தில் பேசிய அப்போதைய ஜனாதிபதி அப்துல்கலாம் மீண்டும் நாலந்தா பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற தன் விருப்பத்தை வெளியிட்டார். இதையடுத்து அதற்கான பணிகள் தொடங்கின.சீனா, தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் இதற்கு நிதி உதவி செய்தன. மேலும் மத்திய அரசும் ரூ.2700 கோடி வழங்குகிறது. இதன் மூலம் பீகார் மாநில அரசு ராஜ்கிர் நகரில் நாலந்தா பல்கலைக்கழகத்தை உருவாக்கி வருகிறது.

முதல் கட்டமாக நிர்வாக அலுவலகமும் சில வகுப்பறைகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து 821 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நாலந்தா பல்கலைக்கழகம் மீண்டும் செயல்படத் தொடங்கியது.15 மாணவர்களுடன் வகுப்புகள் தொடங்கியுள்ளன. இதற்கிடையே நாலந்தா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க உலகின் பல நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.இதன்மூலம் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் விருப்பம் நிறைவேறியுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நாலந்தா பல்கலைக்கழகம் ஏற்கனவே இருந்த பல்கலைக்கழகத்தில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் உருவாக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி