செய்திகள்,திரையுலகம் மீண்டும் இணைந்து நடிக்கும் மலையாள சூப்பர் ஸ்டார்கள்!…

மீண்டும் இணைந்து நடிக்கும் மலையாள சூப்பர் ஸ்டார்கள்!…

மீண்டும் இணைந்து நடிக்கும் மலையாள சூப்பர் ஸ்டார்கள்!… post thumbnail image
சென்னை:-மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டியும், மோகன்லாலும் இதுவரை 55 படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள். கடைசியாக டுவண்டி டுவண்டியில் இணைந்து நடித்தார்கள். மம்முட்டி படங்களில் மோகன்லாலும் மோகன்லால் படங்களில் மம்முட்டியும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள்.

சில வருட இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள். ஷாஜி கைலாஷ் இயக்குகிறார். ரஞ்சித், ரெஞ்சி பணிக்கர் ஆகியோர் கதை, திரைக்கதை எழுதுகிறார்கள். இந்தப் படத்தை பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க இருக்கிறார்கள்.

சமீபத்தில் உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் சேர்ந்திருந்த மோகன்லாலை முதல் ஆளாக போய் சந்தித்து நலம் விசாரித்தவர் மம்முட்டி சீக்கிரம் எந்திருச்சி வா சேட்டா, தனிச்சு விளையாட கஷ்டமா இருக்கு என்று சொல்லிவிட்டு வந்தாராம் மம்முட்டி.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி