இந்த ஆட்டத்தில் ஜெய்ப்பூர் அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. முதல் பாதியில் 17-13 என்ற புள்ளி கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது. சரிவில் இருந்து மீள மும்பை முயற்சித்த போதிலும் ஜெய்ப்பூரின் ஆக்ரோஷமான ஆட்டத்தின் முன்பாக அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.முடிவில் ஜெய்ப்பூர் அணி 35-24 என்ற புள்ளி கணக்கில் மும்பையை வீழ்த்தி முதலாவது புரோ கபடி மகுடத்தை சூடியது. ஜெய்ப்பூர் அணியில் எதிராளியை மடக்கி ‘கேட்ச்’ செய்வதில் பிரசாந்த் சவானும் (6 புள்ளி), ரைடரில் மனிந்தர்சிங்கும் (7 புள்ளி), ஆல்- ரவுண்டராக ராஜேஷ் நார்வலும் (7 புள்ளி) ஜொலித்தனர். மும்பை அணியில் அதிகபட்சமாக ரைடர் அனுப்குமார் 11 புள்ளிகளை சேகரித்தார்.
வெற்றி உறுதியானதும் ஜெய்ப்பூர் அணியின் உரிமையாளர் நடிகர் அபிஷேக் பச்சன், அவரது மனைவி நடிகை ஐஸ்வர்யா ராய் ஆகியோர் உற்சாகத்தில் துள்ளி குதித்து சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டனர். சாம்பியன் கோப்பையுடன் ரூ.50 லட்சம் பரிசுத்தொகையும் ஜெய்ப்பூர் அணிக்கு வழங்கப்பட்டது.
முன்னதாக 3-வது இடத்திற்கான ஆட்டத்தில் பாட்னா அணி 29-22 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரை தோற்கடித்து 3-வது இடத்தை பிடித்தது. பெங்களூர் அணி 4-வது இடத்தை பெற்றது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி