சென்னை:-நடிகை குஷ்பு. பின்னர் டைரக்டர் சுந்தர்.சியை திருமணம் செய்து கொண்டு தமிழ்நாட்டு மருமகளாகி, அரசியல்வாதியாகவும் மாறி, இப்போது மீண்டும் சினிமாவில் தயாரிப்பாளராகியிருக்கிறார். இந்த நேரத்தில், சினிமாவில் நடக்கும் காரசார விவாதங்களில் தானும் தைரியமாக கருத்து கூறி வரும் குஷ்பு. சமீபத்தில் இணையதள ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தபோது,
கும்பகோணத்தில நடைபெற்ற தீ விபத்தில் பள்ளி குழந்தைகள் இறந்ததில் இருந்து நான் நாத்திகவாதியாகி விட்டேன் என்று குறிப்பிட்டிருப்பவர், பெண்களுக்கு தன்னம்பிக்கை முக்கியம். எனக்கு அது அதிகமாகவே இருக்கிறது என்று பதிலளித்தார். மேலும், இணையதளங்களில் விஜய்–அஜீத் ரசிகர்கள் தேவையில்லாமல் மோதிக்கொள்கிறார்கள். இது அவர்களது குழந்தைத்தனமான முதிர்ச்சியற்ற தனமையை காட்டுகிறது என்று கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி