செய்திகள்,திரையுலகம் ரீமேக் ஆகும் ‘சிகப்பு ரோஜாக்கள்’!…

ரீமேக் ஆகும் ‘சிகப்பு ரோஜாக்கள்’!…

ரீமேக் ஆகும் ‘சிகப்பு ரோஜாக்கள்’!… post thumbnail image
சென்னை:-பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, கே.பாக்யராஜ் நடித்து 1978-ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான வெற்றிப்படம் – சிகப்பு ரோஜாக்கள். ஏற்கெனவே ஹிட்டான சில படங்கள் மீண்டும் ரீ-மேக் செய்து வரும் தற்போதைய டிரெண்டின்படி பாரதிராஜாவின் சிகப்பு ரோஜாக்கள் படம் ரீ-மேக் ஆவது தற்போது உறுதி செய்யப்பட்ட செய்தியாகிவிட்டது. சிகப்பு ரோஜாக்கள் ரீமேக்கை தற்போது இயக்கவிருப்பது பாரதிராஜா அல்ல, பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி. பாரதிராஜா, மணிரத்னம் இயக்கிய சில படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ள மனோஜ் பாரதி இந்த படத்தின் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகவிருக்கிறார்.

பாரதிராஜா இயக்கிய தாஜ்மஹால் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான மனோஜ் பாரதி, தொடர்ந்து ஈரநிலம் உட்பட பல படங்களில் நடித்தார். ஒரு படமும் அவருக்கு உதவவில்லை. இப்போது வாய்மை, 13, கதிர்வேல் காக்க ஆகிய படங்களில் நடித்து வருகிறாராம் மனோஜ் பாரதி. இப்படங்களை முடித்த உடனே, சிகப்பு ரோஜாக்கள் படத்தின் ரீ-மேக்கை இயக்க இருக்கிறார். இந்தப் படத்திற்கு சிகப்பு ரோஜாக்கள் என்ற பெயர் பழைய பெயரையே வைக்காமல் சிவப்பு ரோஜா என்று புதுமையான பெயரை வைத்துள்ளார். இப்படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கின்றனர். பாரதிராஜாவும் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்க இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்கவிருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி