சென்னை:-நடிகர் விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுளள கத்தி படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருப்பதால் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. படத்திற்கு மாணவர்கள் அமைப்பு மட்டுமின்றி, சில அரசியல் கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்து வருவதால், தீபாவளிக்கு கத்தி திரைக்கு வருமா என்பதே சந்தேகமாகியிருக்கிறது.
இந்நிலையில், சென்னையை அடுத்த மீஞ்சூரை சேர்ந்த கோபி என்பவர், முருகதாஸ் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறாராம். அதில் அவர், கத்தி கதையை முருகதாசுக்கு சொன்னதே நான்தான். அந்த கதையை கேட்டவர், கதை நன்றாக இருக்கிறது. அதனால் நானே தயாரிக்கிறேன் என்றுதான் என்னிடம் சொன்னார்.
ஆனால், என்னிடம் வாங்கிய அந்த கதையை இப்போது அவரே விஜய்யை வைத்து இயக்கியிருக்கிறார். சமீபகாலமாக, முன்னணி இயக்குனர்கள இயக்கும் படங்களை எதிர்த்து இந்த மாதிரி உதவி இயக்குனர்கள் வழக்குத் தொடர்வது சகஜமாகி வருவதால், இது எந்த அளவுக்கு உண்மை என்பது விசாரணைக்கு பிறகுதான் தெரியவரும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி