லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் சென்ற ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனின் தம்பி ரமேஷ் பாபு அங்கு அர்னால்டை சந்தித்து பேசினார். அவருக்கு அர்னால்டு விருந்தளித்து வரவேற்றார். அந்த விருந்தில் ஐ படத்தின் மேக்கிங் வீடியோ மற்றும் படத்தின் சில முக்கிய காட்சிகளை போட்டுக் காட்டினார். அதைப் பார்த்து ஆச்சர்யமடைந்த அர்னால்டு ஹாலிவுட் படங்களை விட பிரமாதமாக இருக்கிறதே இந்தியா ஒரு ஏழை நாடு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அங்கு இப்படியெல்லாம் படம் எடுக்கிறீர்களா என்று கேட்டிருக்கிறார்.
அதோடு விக்ரம் 120 கிலோ எடை ஏற்றியதையும் அதை 50 கிலோவாக குறைத்த பயற்சி வீடியோவையும் போட்டு காட்டியிருக்கிறார். தொழில்முறை பாடி பில்டரான என்னால்கூட இதனை செய்ய முடியாது நான் உடனே அவரை பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.அதன் பின்னர் செப்படம்பர் 15 விழாவுக்கு அவரை அழைத்துவிட்டு திரும்பினார் ரமேஷ் பாபு.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி