மும்பை:-கடை திறப்பு, கல்யாண விழா இவற்றிற்கு இந்தித் திரையுலக நட்சத்திரங்களை வரவழைப்பது அங்குள்ளவர்களுக்கு ஒரு பெருமையான விஷயம். சினிமாவில் நடிப்பது போக, இப்படிப்பட்ட வருமானங்களும் அவர்களுக்கு அதிகமாகவே வரும். பெரிய நட்சத்திரங்களில் இருந்து சிறிய நட்சத்திரங்கள் வரை பணம் கொடுத்து அழைத்தால் அனைத்து விழாக்களுக்கும் செல்வார்கள்.
சமீபத்தில் சல்மான் கானை ஒரு கல்யாண மண்டபம் திறந்து வைக்க அழைத்த போது அதற்கு 3.5 கோடி ரூபாய் கேட்டாராம். அவருக்கு மட்டும் 3 கோடி ரூபாய், அவருடைய உதவியாளர்கள், பாதுகாவலர்கள் வருவதற்கு 50 லட்சமாம். கல்யாண மண்டபம் திறக்கப்படுவது இங்கல்ல, லண்டன் மாநகரில். அடுத்த மாதம் நடைபெற உள்ள அந்த நிகழ்ச்சிக்காக இன்னும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். இரண்டு நாட்களில் அங்கு சென்று வருவதற்கும், ரசிகர்களிடம் கொஞ்ச நேரம் உரையாடுவதற்கும் சல்மான் கேட்ட அந்தத் தொகையைத் தருவதற்கும் அந்த மண்டபத்தைக் கட்டியுள்ள தொழிலதிபர் குடும்பம் தயாராக உள்ளதாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி