செய்திகள்,திரையுலகம் தி எக்ஸ்பெண்டபில்ஸ் 3 (2014) திரை விமர்சனம்…

தி எக்ஸ்பெண்டபில்ஸ் 3 (2014) திரை விமர்சனம்…

தி எக்ஸ்பெண்டபில்ஸ் 3 (2014) திரை விமர்சனம்… post thumbnail image
தி எக்ஸ்பெண்டபில்ஸ் என்ற குழு பார்னி ராஸின் தலைமையில் இயங்குகிறது. அமெரிக்க அரசு உலகில் தீங்கான வேளைகளில் ஈடுபடுபவர்களின் கதையை முடிக்கும் பணியை இந்த குழுவிடம்தான் ஒப்படைக்கும். அதன்படி படத்தின் தொடக்கத்தில் எக்ஸ்பெண்டபில்ஸ் குழுவைச் சேர்ந்த டாக்கை ரஷ்ய படையினர் தனி சிறையில் அடைப்பதற்காக தனி ரெயிலில் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்கின்றனர்.அப்போது அங்கு வரும் பார்னி ராஸ் குழுவினர் ரஷ்ய பாதுகாப்பு படையினரை போட்டுத்தள்ளி விட்டு டாக்கை மீட்டு செல்கின்றனர். இதை தொடர்ந்து பார்னி ராசின் குழு எத்தியோப்பியாவில் ஆயுத பேரத்தில் ஈடுபடும் ஒரு நபரை பிடிக்க செல்கிறது.

நீண்ட நேர சாகசத்திற்கு பின் அந்த ஆயுத பேர பேர்வழி யார் என்று பார்த்தால், அவன் பார்னியால் ஏற்கனவே கொல்லப்பட்டதாக கருதப்பட்ட எக்ஸ்பென்டபில்ஸின் முன்னாள் குழு உறுப்பினரான ஸ்டான் பேங்ஸ். அவன் உயிருடன் இருப்பதை பார்த்த பார்னி அதிர்ச்சியடைகிறான். அப்போது ஸ்டான் பேங்ஸ் தரப்புக்கும், எக்ஸ்பென்டபிள்ஸ் குழுவினருக்கும் இடையே கடும் சண்டை நடக்கிறது.இந்த சண்டையின் போது பார்னியின் குழுவை சேர்ந்த ஒருவனை ஸ்டோன் பேங்ஸ் கொன்றுவிடுகிறான். இதனால் ஸ்டோன் பேங்ஸை கொல்ல தனது பழைய தாதாக்கள் குழுவால் முடியாது என்று நினைக்கும் பார்னி புதிதாக இளைஞர் படை ஒன்றை உருவாக்குகிறார். அதன் பின் ஸ்டோன் பேங்ஸை பழைய தாதாக்கள் கொன்றார்களா? அல்லது பார்னியால் உருவாக்கப்பட்ட இளைஞர் படை கொன்றதா? என்பதே மீதிக் கதை.
எக்ஸ்பெண்டெபில்ஸ் 1 மற்றும் 2-ம் பாகங்களை போல் இப்படத்திலும் எத்தனை துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தாலும் எக்ஸ்பென்டபில்ஸுக்கு ஒன்றும் ஆவதில்லை. இந்த பாகத்தில் ஹாரிஸன் போர்ட், மெல் கிப்சன், ஆண்டனியோ பான்டரஸ், வெஸ்லி ஸ்னைப்ஸ் ஆகியோர் புதிதாக சேர்ந்திருக்கிறார்கள்.

துப்பாக்கி கையில் இருந்தும் கதாநாயகனை சுடாமல் ஒண்டிக்கு ஒண்டி பார்ப்போம் என்று வெற்று சவடால் விடும் நபராக வில்லன் மெல் கிப்ஸன். ஹாரிஸன் போர்ட் கிளைமாக்ஸ் காட்சியில் மட்டும் ஹெலிகாப்டரில் வந்து தன் பங்குக்கு மெல் கிப்சனை நொறுக்குகிறார்.ஸ்டாலோனை அழைத்து செல்வதும், திரும்ப கொண்டு வந்து விடுவதும் தான் அர்னால்டுடைய வேலை. படத்தில் அர்னால்டுக்கு வசனமே கிடையாது. ஜெட் லீக்கும் சண்டை காட்சி மட்டுமே. அவருக்கும் டயலாக் கிடையாது. ஜேசன் ஸ்டெதம் மட்டும் நீண்ட நேரம் காட்சி தருகிறார். வெஸ்லி ஸ்னைப்ஸின் ஆடு வெட்டும் கத்தியால் தாடியை ஷேவ் செய்வது, கட்டிடங்களுக்கிடையே தாவுவது போன்ற காட்சிகளில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.படத்தில் பெண்ணே இல்லை என்ற குறையை போக்க பார்னியின் இளைஞர் குழுவில் பாரில் பவுன்சராக இருக்கும் பெண் ஒருவரும் சேர்க்கப்பட்டுள்ளார். அமெரிக்காவுக்கு ஆகாத நாடுகளான எத்தியோப்பியா, ரஷ்யா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் தான் காட்சிகளை படமாக்கியிருக்கிறார்கள்.எனினும் இரண்டாவது பாகத்தில் இருந்த விறுவிறுப்பு இந்த படத்தில் இல்லை. காரணம் இப்படத்தை இயக்கிய பாட்ரிக் ஹியுக்சுக்கு இது இரண்டாவது படமாகும். ஆகையால் படம் கொஞ்சம் தொங்குகின்றது.

மொத்தத்தில் ‘தி எக்ஸ்பெண்டபில்ஸ் 3’ அதிரடி…………

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி