சென்னை:-ஏ.எல்.விஜய் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கிறார். இதில் இரண்டு ஹீரோயின்கள். ஒருவர் முன்னாள் ஹீரோயின் மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ். இன்னொரு நாயகியாக காவ்யா ஷெட்டி நடிக்கிறார். காவ்யா ஷெட்டி ஏற்கெனவே தெலுங்கில் நடித்த ஷிவானி படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவந்தது. நம் துனியா நம் ஸ்டைல் என்ற கன்னடப் படத்தில் நடித்துள்ளார். வாராயோ வெண்ணிலாவே படத்தில் நடித்தார். தற்போது அவம் என்ற படத்தில் நடித்த வருகிறார்.
விஜய் படத்தில் நடிப்பது பற்றி காவ்யா ஷெட்டி கூறியதாவது: எனது முந்தைய படங்களை பார்த்து விட்டு விஜய் என்னை அழைத்து பேசினார். இரண்டு முறை அவரை சந்தித்தேன் எனது கேரக்டர் பற்றிச் சொன்னார். ஹீரோ விக்ரம் பிரபுவின் பிளாஷ் பேக்கில் அவரது காதலியாகவும், கல்லூரி மாணவியாகவும் நடிக்கிறேன். இதற்கான போட்டோ ஷூட் நடந்தது. அதைத் தொடர்ந்து ஒர்க்ஷாப்பும் நடந்தது. தற்போது கொச்சியில் நடக்கும் படப்பிடிப்பில் விக்ரம் பிரபுவுடன் நடித்து வருகிறேன் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி