செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் ‘ஐ’ படவிழாவில் அர்னால்டு, ஜாக்கிசான்: ஆஸ்கார் ரவிச்சந்திரன் தகவல்!…

‘ஐ’ படவிழாவில் அர்னால்டு, ஜாக்கிசான்: ஆஸ்கார் ரவிச்சந்திரன் தகவல்!…

‘ஐ’ படவிழாவில் அர்னால்டு, ஜாக்கிசான்: ஆஸ்கார் ரவிச்சந்திரன் தகவல்!… post thumbnail image
சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘ஐ’ படம் மெகா பட்ஜெட்டில் தயாராகி உள்ளது. ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகிறது. அடுத்த மாதம் பாடல் வெளியீட்டு விழா நடக்கிறது.இதில் ஹாலிவுட் நடிகர்கள் அர்னால்டு, ஜாக்கிசான் பங்கேற்கின்றனர். இதுகுறித்து தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:–

‘ஐ’ படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், சைனீஸ், தைவான் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்பின் பாடல்கள் வெளியீட்டு விழா அடுத்த மாதம் நடக்கிறது.
சென்னையில் நடக்கும் விழாவில் தமிழ் பதிப்பின் பாடல்களை ஹாலிவுட் நடிகர் அர்னால்டு வெளியிடுகிறார். ஐதராபாத்தில் நடக்கும் தெலுங்கு ‘ஐ’ பட விழாவில் ஜாக்கிசான் பங்கேற்று பாடல்களை வெளியிடுகிறார். தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி