செய்திகள்,திரையுலகம் லட்சுமி மேனன், கார்த்திகா, துளசி நடிக்க தடை கோரி வழக்கு!… தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்…

லட்சுமி மேனன், கார்த்திகா, துளசி நடிக்க தடை கோரி வழக்கு!… தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்…

லட்சுமி மேனன், கார்த்திகா, துளசி நடிக்க தடை கோரி வழக்கு!… தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்… post thumbnail image
சென்னை:-சினிமாவில், 18வயதுக்கு கீழ் உள்ள பெண்கள் ஹீரோயினாக நடிக்க தடைவிதிக்க வேண்டும் என்பது தொடர்பாக, பெண் ஒருவர் தொடரப்பட்ட வழக்கை சென்னை, ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. தமிழ்நாடு மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் முத்துசெல்வி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

அதில், சினிமாவில் 18 வயதுக்கும் குறைவான பெண்களை ஹீரோயினாக நடிக்க வைக்கின்றனர். சின்ன வயதில் அவர்களது மனம் பக்குவப்படாமல் இருக்கும் சூழலில் சினிமாவில் நடிப்பதால் அவர்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். பாலியல் கொடுமைக்கும் ஆளாகுகின்றனர்.சமீபகாலமாக சந்தியா, கார்த்திகா, லட்சுமி மேனன், துளசி போன்றோர் 18 வயதை பூர்த்தியாகும் முன்பே, அதாவது பள்ளியில் படிக்கும்போதே ஹீரோயினாகிவிட்டனர். இப்படி சிறுமிகளை நடிக்க வைப்பது நீதிச் சட்டத்துக்கும், அகில இந்திய குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்துக்கும் எதிரானது ஆகும். எனவே, 18 வயதுக்கு குறைவான சிறுமிகளை சினிமாவில், ஹீரோயினாக நடிக்க வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு லட்சியம், கனவு, தாங்கள் என்ன ஆக வேண்டும் என ஆசை இருக்கும். அதன்படி அவர்கள் செயல்படுகின்றனர். இதில் கோர்ட் தலையிட முடியாது. இதற்காக பொதுநல வழக்கும் தொடர முடியாது, எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம் என்று உத்தரவிட்டுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி