அதனால் அடுத்து தெலுங்கில் ஒரு படத்தில் நடித்தார். இருப்பினும், சினிமாவில் எதிர்காலம் அவருக்கு மங்கலாகவே தெரிந்தது. அதனால், ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைத்ததால் திருமணம் செய்து கொண்டு இல்லறத்தில் நுழைந்தார் நிஷா அகர்வால். இருப்பினும், அவரது அடி மனதிற்குள் இருந்த சினிமா ஆசை அவரை விடவில்லை. அரிதாரம் பூசும் ஆசையை தூண்டிக் கொண்டேயிருந்ததால் தற்போது கணவரின் அனுமதியுடன் மலையாளத்தில் பாக்யா பாக்யா, தெலுங்கில் டி.கே போஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த படங்களில் ஹோம்லியான வேடங்களில் நடிக்கவே நிஷா அகர்வால் ஒப்பந்தமான போதும், பாடல் காட்சிகளில் காஜல் அகர்வால் ரேஞ்சுக்கு ஓரளவு கவர்ச்சியாக நடிக்குமாறு கேட்டுக் கொண்டார்களாம். அதற்கு, என் அக்காளின் உடல்கட்டு கவர்ச்சிக்கு பொருத்தமாக இருக்கும். ஆனால் என் உடலமைப்பு பொருந்தாது.அதுமட்டுமின்றி, என் கணவர் கவர்ச்சியாக நடிக்கக்கூடாது என்ற கண்சனின் பேரில்தான் நடிக்கவே ஒத்துக்கொண்டார். அதை மீறினால் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு விடும் என்று தனது நிலையை சொல்லி கவர்ச்சிக்கு தடா போட்டு விட்டாராம் நிஷா அகர்வால்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி