தற்போது விண்கலம் செவ்வாய் கிரகத்தில் இருந்து 90 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.இன்னும் 33 நாட்களில் விண்கலம் செவ்வாய் கிரக சுற்றுப்பாதையை சென்றடையும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.இது குறித்து இஸ்ரோ சமூக வலைதளத்தில் கூறி இருப்பதாவது :-
செவ்வாய் கிரகத்தை நோக்கி பயணம் செய்யும் மங்கள்யான் விண்கலம் பூமியில் இருந்து 1890 லட்சம் கிலோமீட்டர் தூரத்த்தில் விண்கலம் உள்ளது.செவ்வாய் கிரகத்தில் இருந்து 90 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இன்னும் 33 நாட்களில் விண்கலம் செவ்வாய் கிரக சுற்றுவட்டபாதையை சென்றடையும்.இந்திய விஞ்ஞானிகள் வரும் ஆகஸ்டு மாதம் முதல் பகுதியில் 3-வது திருத்தம் செய்வதற்கு ‘இஸ்ரோ’ திட்டமிட்டது பின்னர் அந்த திட்டத்தை கைவிட்டனர் இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி