சென்னை:-அமெரிக்காவில் ஏ.எல்.எஸ் என்ற அமைப்பு உள்ளது. இது நரம்பு சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உதவும் ஒரு அமைப்பு.இந்த அமைப்பு நோயாளிகளுக்கு நிதி திரட்டுவதற்காக ஒரு நூதன திட்டம் வைத்திருக்கிறது. ஒரு பக்கெட் நிறைய ஜில்லென்ற ஐஸ் வாட்டருடன் வி.ஐ.பிக்களை சந்திக்கும். அந்த குளிர்நீரை தலையில் ஊற்றிக் குளித்தால் 10 டாலர் நன்கொடை தர வேண்டும். பயந்து குளிக்க மறுத்தால் 100 டாலர் நன்கொடை தரவேண்டும்.
பல வி.ஐ.பிக்கள் 90 டாலரை மிச்சப்படுத்த குளித்து விடுகிறார்கள். சிலர் 100 டாலரை தூக்கி கையில் கொடுத்து விடுகிறார்கள்.சமீபத்தில் அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்ற ஹன்சிகாவை பிடித்தார்கள் இந்த அமைப்பினர். அவரிடம் ஒரு பக்கெட் குளிர் நீரை கொடுத்ததும். ஹாயாக வாங்கி தலையில் ஊற்றி விட்டு எதுவும் நடக்காதது போல சிரித்தபடி போஸ் கொடுத்தார். பத்து டாலர் நன்கொடையை வாங்கிக் கொண்டு அவர்கள் சென்று விட்டார்கள்.ஆனால் ஹன்சிகாவின் இந்த குளியல் காட்சி இணைய தளத்தில் சக்கை போடு போடுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி