செய்திகள் உதவி பொருட்களுடன் அனுமதியின்றி கிழக்கு உக்ரைனுக்குள் நுழைந்த 200 ரஷிய ராணுவ லாரிகள்!…

உதவி பொருட்களுடன் அனுமதியின்றி கிழக்கு உக்ரைனுக்குள் நுழைந்த 200 ரஷிய ராணுவ லாரிகள்!…

உதவி பொருட்களுடன் அனுமதியின்றி கிழக்கு உக்ரைனுக்குள் நுழைந்த 200 ரஷிய ராணுவ லாரிகள்!… post thumbnail image
கீவ்:-உக்ரைனில் கிழக்கு பகுதியில் மெஜாரிட்டியாக வாழும் ரஷியர்கள் தங்களுக்கு இப்பகுதியில் தன்னாட்சி உரிமை கோரி கடந்த 4 மாதங்களாக போராடி வருகின்றனர். கிழக்கு உக்ரைனில் லுகர்னஸ் உள்ளிட்ட பெரு நகரங்களை தங்கள் பிடியில் வைத்துள்ளனர்.அவற்றை மீட்க ராணுவம் தீவிரமாக போரிட்டு வருகிறது. அதில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். 3 லட்சத்து 30 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறிவிட்டனர்.

தற்போது கிழக்கு உக்ரைனில் தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. இதனால் அங்கு வாழும் மக்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவிக்கின்றனர். அவர்களுக்கு உதவ பொருட்களுடன் 200 ரஷிய ராணுவ லாரிகள் உக்ரைனுக்கு சென்றன.ஆனால் அவை உள்ளே நுழைய உக்ரைன் அனுமதி வழங்கவில்லை. இதனால் பல நாட்களாக காத்திருந்த லாரிகள் நேற்று கிழக்கு உக்ரைன் எல்லை வழியாக புகுந்து ரஷிய ஆதரவாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள லுகர்னஸ் நகருக்குள் நுழைந்தன.
அப்போது தடுத்து நிறுத்திய உக்ரைன் ராணுவ வீரர்கள் மீது ரஷிய ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதாக ‘நேட்டோ’ தெரிவித்துள்ளது. இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.

ரஷியாவின் இந்த அத்துமீறிய செயலுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்கா அதிபர் ஒபாமா, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலுடன் இதுகுறித்து டெலிபோனில் பேசினார்.ரஷியாவின் இந்த அத்துமீறய செயல் உக்ரைனின் இறையாண்மைக்கு எதிரானது. எனவே, கிழக்கு உக்ரைனில் இருந்து லாரிகளை வாபஸ் பெற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, தாம் துப்பாக்கி சூடு நடத்தவில்லை என ரஷியா கூறியுள்ளது. பசியால் வாடும் குழந்தைகளுக்கு மனிதாபிமான முறையில் உணவு பொருட்கள் அனுப்பியதாக தெரிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி