தனது மகன் கைதானது குறித்து பிரபல நடிகர் ஜாக்கி ஜான் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார் இந்நிலையில் அவர் தனது சமூக வலைதளத்தில் இதற்கு நான் வெட்கபடுகிறேன், எனது இதயம் உடைந்து போய் உள்ளேன் என கூறி உள்ளார்இனையதளத்தில் அவர் எழுதி உள்ளதாவது:
இந்த பிரச்சினை தொடர்பாக, நான் கோபமாகவும் அதிர்ச்சிகரமாகவும் உணர்கிறேன். நான் பிரபலமானவன் என்ற அடிப்படையில் இதற்கு நான் மிகவும் வெட்கப்படுகிறேன்.
தந்தை என்ற அடைப்படையில் எனது இதயம் உடைந்து போய் இருக்கிறேன் ஜெய்சி மற்றும் நான் இந்த சமூகத்திடமும், பொதுமக்களிடமும் ஆழ்ந்த மன்னிப்பு கேட்டு கொள்கிறோம். அனைத்து இளைஞர்களும் ஜெய்சியை பார்த்து பாடம் கற்று கொள்ள வேண்டும் போதை பொருள் ஒரு தீங்கானது.
ஜெய்சி க்கு நான் கூறிக்கொள்கிறேன் தவறு செய்யும் போது அதற்குரிய விளைவுகளை ஏற்று கொள்ள வேண்டும். உனது தந்தை என்ற நிலையில் வருபவைகளை உன்னுடன் சேர்ந்து எதிர்கொள்ள போகிறேன். இவ்வாறு அவர் அதில் எழுதி உள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி