இது குறித்து ஜோதிகாவிடம் பேசிவிட்டு, ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ படத்தின் இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூஸை தொடர்பு கொண்டு, ஹவ் ஓல்டு ஆர் யூ’வின் தமிழ் ரீ-மேக்கில் ஜோதிகா நடிக்க விரும்புகிறார். என்ற தகவலை சொன்னதோடு, உங்களால் சென்னைக்கு வரமுடியுமா? என்று கேட்டாராம். இயக்குநர் ரோஷன் ஆன்ட்ரூஸ் சென்னைக்கு வந்தார். இதற்கிடையில் ஜோதிகாவையும் சம்மதிக்க வைத்திருக்கிறார் சூர்யா. தமிழ் சினிமாவில் இத்தனை புகழோடு இருந்தவர், மீண்டும் நடிக்க வருவதென்றால் அந்தப் படத்தில் அவருக்கு தீனி போடும் கேரக்டர் அவருக்கு அமைய வேண்டுமே? அவரின் காத்திருப்பு வீண் போகாது என்றே கூறுகிறார்கள் ஹவ் ஓல்டு ஆர் யூ மலையாளப்படத்தைப் பார்த்தவர்கள்.
அந்தப் படத்தின் கதை. வருவாய்த்துறையில் கிளார்க் வேலை செய்யும் நடுத்தர வயது பெண் ஒருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. அதனால்தான் அந்த வேடத்தில் மஞ்சு வாரியரை நடிக்க வைத்திருந்தனர். இப்போது அந்த வேடத்தில் ஜோதிகா நடிக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி