செய்திகள் மறைந்த பிரதமர் இந்திரா காந்தி படுகொலை குறித்த திரைப்படத்துக்கு தடை!…

மறைந்த பிரதமர் இந்திரா காந்தி படுகொலை குறித்த திரைப்படத்துக்கு தடை!…

மறைந்த பிரதமர் இந்திரா காந்தி படுகொலை குறித்த திரைப்படத்துக்கு தடை!… post thumbnail image
புதுடெல்லி:-மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலையை மையமாகக் கொண்டு பஞ்சாபி மொழியில், ‘கெளம் தே ஹீரே’ என்ற திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் இந்திரா காந்தியை படுகொலை செய்த கொலையாளிகள் பேயாந்த் சிங், சத்வந்த் சிங், கேஹர் சிங் ஆகியோரைப் புகழ்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது.

இத்திரைப்படத்தை வெளியிட்டால் நாட்டில் சட்டம்-ஒழுங்கு கடுமையாகப் பாதிக்கும் என்பதால், இத்திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்கும்படி பஞ்சாப் மாநில காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் கோரிக்கை விடுத்தன.இதையடுத்து, மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சகம், மத்திய உள்துறை அமைச்சகம், மத்தியத் திரைப்படச் சான்றிதழ் வாரியம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கூட்டாக இத்திரைப்படத்தை பார்த்தனர்.

அதன்பிறகு மத்திய உள்துறை அமைச்சகம், இத்திரைப்படத்துக்குத் தடை விதிக்க பரிந்துரை செய்ததைத் தொடர்ந்து, ‘கெளம் தே ஹீரே’ திரைப்படத்துக்கு மத்தியத் திரைப்படச் சான்றிதழ் வாரியம் தடை விதித்தது. இது குறித்து அந்த வாரியத் தலைவர் லீலா சாம்ஸன் கூறியதாவது:- நாங்கள் இந்தத் திரைப்படத்தை பார்த்தோம். இப்படத்தை திரையிட்டால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்ததையடுத்து இத்திரைப்படத்தை திரையிடத் தடை விதிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி