கெய்ரோ:-எகிப்தின் தெற்கு சினையில் உள்ள ஷார்ம் எல்-ஷேக் என்ற இடத்தில் இருந்து 50 கி.மீ. தொலைவில் தேசிய நெடுஞ்சாலை உள்ளது.இந்த சாலையில் இன்று காலை சுற்றுலாப் பயணிகள் உள்பட 80 பேர் இரண்டு பஸ்களில் பயணம் செய்தனர். இந்த பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் சுற்றுலாப் பயணிகள் உள்பட 33 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். 41 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
உயிர்ப்பலி மேலும் அதிகரிக்கும் என்று தெற்கு சினை சுகாதாரத்துறை மந்திரி அலுவலக துணைச்செயலாளர் மொகமது லஷின் தெரிவித்தார். மேலும்,இடிபாடுகளுக்கு இடையே சிக்கியுள்ள உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. 30 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி