அமீர்கான் இந்தியில் நடித்துள்ள ‘பிகே’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. அந்த போஸ்டரில் அமீர்கான் அரை நிர்வாணமாக காட்சியளித்தது குறித்து பல்வேறு அமைப்புகள் அந்த படத்தை தடை செய்யவேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.
இந்நிலையில், இப்படத்தின் மற்றுமொரு போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் உடல் முழுக்க ஆடையுடன் அமீர்கான் தோன்றுகிறார். அதில், பாண்ட்வாலா ஆடையணிந்து, கையில் பிரெஞ்ச் ஹார்ன் மற்றும் கண்ணாடி அணிந்துகொண்டு இருக்கிறார். இந்த வித்தியாசமான தோற்றம் படத்தின் கதை பற்றிய சுவாரஸ்யத்தை அதிகரித்துள்ளது. இப்படத்தை ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி