தமிழ், தெலுங்கு என பிசியாக நடித்து முன்னணி நடிகையாக மாறியுள்ள நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது பாலிவுட்டில் ஒரு படத்தில் குத்துப்பாடல் ஒன்றுக்கு நடனம் ஆட ஒப்புக்கொண்டுள்ளார்.
பாலிவுட்டில் சஞ்சய் கபூர் தான் தயாரிக்க உள்ள அடுத்த படமான மத்யமா என்ற படத்தில்தான் ஸ்ருதிஹாசன் குத்தாட்டம் ஆட உள்ளார்.இந்த படத்தில் அவருடன் அர்ஜூன் கபூர் ஆட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குத்துப்பாட்டில் நடனம் ஆட ஸ்ருதிஹாசனுக்கு ரூ.75 லட்சம் சம்பளம் பேசப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ருதிஹாசன் ஒரு படத்திற்கு ரூ. 1கோடி வரை சம்பளம் வாங்குகிறார். தற்போது ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆட அதுவும் வெறும் 15 நாட்கள் கால்ஷீட்டுக்கு ரூ.75 லட்சம் சம்பளம் பெற்றிருப்பது கோலிவுட் மற்றும் டோலிவுட்டை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி