உலகிலேயே அதிக வயதான ஆணாக கின்னஸில் இடம் பிடித்திருந்த அமெரிக்காவை சேர்ந்த அலெக்ஸாண்டர் இமிச் என்பவர் கடந்த ஜுன் மாதம் மரணம் அடைந்ததையடுத்து, இந்த அங்கீகாரம் சக்காரி மோமோய்-யை வந்தடைந்துள்ளது.
ஏற்கனவே, உலகின் அதிக வயதான பெண்மணி என்ற கின்னஸ் அங்கீகாரத்தை ஜப்பானின் ஒஸாக்கா நகரில் வாழ்ந்து வரும் மிசாவோ ஒக்காவா(116) என்ற மூதாட்டி பெற்றுள்ள நிலையில், உலகிலேயே அதிக வயதான ஆணும், பெண்ணும் வாழும் நாடு என்ற பெருமைக்குரிய அடையாளத்தை சக்காரி மோமோய்-யின் மூலம் தற்போது ஜப்பான் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றளவும், செவித்திறன் குறைபாடு தவிர வேறு எந்தவித உடல் சார்ந்த பாதிப்பும் அவருக்கு இல்லை என்றும், புத்தகம் படிப்பதிலும், டி.வி.யில் ‘சுமோ’ மல்யுத்தப் போட்டிகளை பார்த்து ரசிப்பதிலும் அவர் ஆர்வம் காட்டி வருவதாகவும் உறவினர்கள் கூறுகின்றனர்.
கின்னஸில் தனது பெயர் இடம் பெற்றது குறித்து, பெருமை பொங்க செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சக்காரி மோமோய், ‘இன்னும் 2 ஆண்டுகள் வரை வாழ விரும்புகிறேன்’ என்று தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி